அக்குறணை அஸ்ஹர் மத்திய கல்லூரி முன்னாள் பிரதி அதிபர் சகல குற்றச்சாட்டுக்களிலிருந்தும் விடுதலை

 

அக்குறணை அஸ்ஹர் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை)

முன்னாள் பிரதி அதிபர் சகல குற்றச்சாட்டுக்களிலிருந்தும் விடுதலை

அக்குறணை க/ அஸ்ஹர் தேசிய பாடசாலையின் முன்னாள் பிரதி அதிபர் சகல குற்றமற்றவர் எனக் குறிப்பிட்பி விடுதலை செய்யப்பட்டுள்ளார். 

2017 ஆம் ஆண்டு அக்குறணை தேசிய கல்லூரிக்கு 6ஆம் தரத்திற்கு மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கான நேர்முகப் பரீட்சையின் போது பணம் அறவிட்டதாகக் கூறி அப்போதைய பிரதி அதிபர் திருமதி டி. எஸ் ருக்கையாவுக்கு எதிராக இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவினரால் வழக்கு தொடப்பட்டிருந்த நிலையில் கடந்த 5 வருடங்களாக விசிரிக்கப்பட்டு வந்தது.

மேற்படி வழக்கு கொழும்பு நீதிமன்றத்தினால் அண்மையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்து பிரதிவாதியை நீதிபதி தமித் தொட்டவத்த விடுதலை செய்து தீர்ப்பு வழங்கினார். பிரதிவாதி தரப்பில் ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா ஆஜரானர்.

SHARE the Knowledge

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!