அட்டாளைச்சேனை ஆசிரிய பயிலுனர்கள் பாடசாலைகளுக்கு இணைப்புச் செய்யப்பட்டனர்

அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரியின் 2018/2020 ஆம் வருட ஆசிரிய பயிலுனர்களை அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலுள்ள

பாடசாலைகளுக்கு இணைப்பதற்குரிய அனுமதி கல்வி அமைச்சின் ஆசிரிய கல்விப்பிரிவின் பிரதம ஆணையாளரிடம் இருந்து கிடைக்கப்பெற்றுள்ளதாக கல்லூரியின் பீடாதிபதி தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் உள்ள 08 வலயங்களைச் சேர்ந்த 123 ஆசிரிய பயிலுனர்கள் பாடசாலைகளுக்கு 2022.03.07 ஆம் திகதி முதல் செயற்படும் வண்ணம் இணைக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர் கூறினார்.

ஆரம்பகல்வி, விஞ்ஞானம், கணிதம், விஷேட கல்வி மற்றும் இஸ்லாம் ஆகிய 05 பாடநெறிகளை சேர்ந்த 349 ஆசிரிய பயிலுனர்களும் இவ்வருடம் நிறைவுறும் வரை தங்களது கற்பித்தல் பயிற்சியை மேற்படி பாடசாலைகளில் பெறவுள்ளதாகவும் கல்லூரியின் பீடாதிபதி குறிப்பிட்டார்.

இது தொடர்பான அங்குரார்ப்பண நிகழ்வு தொடருறு கல்விக்கான உப பீடாதிபதி எம்.ஐ. ஐஃபர் தலைமையில் நேற்று (07) கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றது.

பிரதம அதிதியாக கல்லூரியின் பீடாதிபதி சட்டத்தரணி கே.புண்ணியமூர்த்தி கலந்து கொண்டு மேற்கண்ட விடயங்களைத் தெரிவித்தார்.

இதன்டபோது ஆசிரிய பயிலுனர்களை கட்டுறு பயில்வு பாடசாலையில் இணைப்பதற்கான நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

SHARE the Knowledge

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!