அதிபர்கள் நாடளாவிய ரீதியில் அடையாள வேலைநிறுத்தம்

எதிர்வரும் 28ஆம் திகதி நாடளாவிய ரீதியில் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட அதிபர்கள் சங்கக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.

 ஆசிரிய அதிபர் சம்பள முரண்பாடுகளை நீக்கி சுற்றறிக்கை வெளியிட்டு அதிபர்களுக்கு புதிய சம்பள முரண்பாட்டு பிரச்சினை ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்து அதிபர்கள் எதிர்வரும் 28ஆம் திகதி பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 அதிபர் சேவை உத்தியோகத்தர்களை விட ஒரே நாளில் நியமனம் செய்யப்பட்டு, சமமான தகைமைகளை கொண்ட ஆசிரியர் சேவையிலுள்ளோருக்கு அதிக சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டுள்ளதாக அதிபர்கள் தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

 இதேவேளை, இலங்கை கல்வி நிர்வாக சேவை மற்றும் இலங்கை ஆசிரியர் கல்வியாளர் சேவைகளில் உள்ளோர் தமது சேவையிலுள்ளோரும் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளதாகத் தெரிவித்து இன்று பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.

SHARE the Knowledge

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!