அரச சார் நிறுவன ஊழியர்களுக்கும் ரூ.5000
அரச ஊழியர்களுக்கு வழங்கும் அதே சலுகையில்அரச சார் நிறுவன ஊழியர்களுக்கும் ரூ.5000அரசு தீர்மானம்; ஜன.01 முதல் வழங்கப்படும்
அரசாங்க ஊழியர்களுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்ட 5,000 ரூபா மாதாந்த கொடுப்பனவை அரச சார் நிறுவன ஊழியர்களுக்கும் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
குறிப்பாக கூட்டுத்தாபனங்கள், அதிகார சபைகள், அரச நிறுவன ஊழியர்கள் உள்ளிட்ட அரச சார்பு ஊழியர்களுக்கும் இக் கொடுப்பனவை வழங்க தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி ஜனவரி 01 ஆம் திகதி முதல் இத்தீர்மானத்தை நடைமுறைப்படுத்தும் வகையில் நிதி அமைச்சின் செயலாளர் எஸ். ஆர். ஆட்டிகல அமைச்சுக்களின் செயலாளர்கள் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு சுற்றுநிருபம் ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளார்.
நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, அரசாங்க ஊழியர்களுக்கு மாதாந்தம் 5,000 ரூபா கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் என்ற அறிவிப்பை அண்மையில் வெளியிட்டிருந்தார்.
தற்போது அரச மற்றும் அரச சார்பு நிறுவனங்களில் 18 இலட்சம் ஊழியர்கள் கடமையாற்றுகின்றனர். இவர்களில் 14 இலட்சம் பேருக்கு வரவு செலவு திட்டத்தில் நிதி அமைச்சரால் அறிவிக்கப்பட்டவாறு 5,000 ரூபா கொடுப்பனவு கிடைக்கும். அதேவேளை நிதி அமைச்சின் செயலாளர் விடுத்துள்ள சுற்றுநிருபத்தின் பிரகாரம் எஞ்சியுள்ள சுமார் 04 இலட்சம் பேருக்கும் இந்த 5,000 ரூபா கிடைக்கும்.
அரச சார்பு நிறுவனங்களில் கடமைபுரியும் நிரந்தர, ஒப்பந்த மற்றும் தினக் கொடுப்பனவில் கடமைபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் இந்த 5,000 ரூபா கொடுப்பனவு கிடைக்குமென்றும் அரசாங்கம் அறிவித்துள்ளது.
-தினகரன்-