ஆசிரியர்கள் அதிபர்கள் சம்பள முரண்பாட்டுக்காக கூடிய அனைத்துச் கட்சிகளின் கூட்டம் இன்று அபயராம விகாரையில் இடம்பெற்றது.
சங்கைக்குரிய முறுத்தெட்டுவாவே தேரரின் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தை அதிபர் ஆசிரியர் சம்பள முரண்பாட்டுக்கு எதிரான கூட்டமைப்பு ஒழுங்கு செய்திருந்தது.
இதன் போது, ஒக்டோபர் 6 பிரகடனம் வெளியிடப்பட்டது. இதில் 6 பிரதான கோரிக்கைகள் அடங்கியிருந்தன. இதனை சம்பள முரண்பாட்டுக்கு எதிரான கூட்டமைப்பின் ஏற்பாட்டாளர் சங்கைக்குரிய உலபனே சுமங்கல தேரர் வெளியிட்டார்.
இக்கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் உட்பட உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கத் தயாராக இருப்பதாக ஜனாதிபதியும் பிரதமரும் தம்மிடம் தெரிவித்தாக சங்கைக்குரிய முறுத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்தார்.
கட்சிகள் அனைத்தும் ஆசிரியர் அதிபர் சம்பள முரண்பாட்டைத் தீர்ப்பதற்கான உடன்பாட்டை இதன் போது தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.