ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பிற்கான வயதெல்லையை அதிகரிக்குக
ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான குறைந்தபட்ச வயதை உயர்த்துமாறு கல்வி அமைச்சிடம் இன்று (28) அபிவிருத்தி உத்தியோகத்தர் நிலையம் சார்பாக கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் கல்வி அமைச்சுக்கு சென்றிருந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தின் பொறுப்பாளர்கள் கல்வி அமைச்சர், மற்றும் செயலாளரயார் சந்திக்க முடியாது போக, மேலதிக செயலாளருடன் (நிர்வாகம்) பேச்சுவார்த்தை நடத்தினர்.
தமது கோரிக்கைக்கு இன்னும் 14 நாட்களில் பதில் வரவில்லை என்றால் போராட்டத்திற்கு தயாராகுவதாக சங்கம் எச்சரித்துள்ளது.
பாடசாலைகளில் இணைப்புச் செய்யப்பட்டுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்களை பரீட்சை இன்றி, வயது கட்டுப்பாடு இன்றி ஆசிரியர் சேவைக்குள்வாங்குமாறு இவர்கள் தொடர்ச்சியாக கோரிக்கை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.