ஆள்மாறாட்டம் – பிக்கு கைது
கொக்மாதுவ – வெலிகம பிரதேசத்தில் உள்ள பிக்கு ஒருவருக்காக, போலியான அடையாள அட்டையைப் பயன்படுத்தி உயர்தரப் பரீட்சை எழுத முயற்சித்த பிக்கு கைது செய்யப்பட்டுள்ளார்.
புத்தளம் – ஷாந்த மரியா தமிழ் மகா வித்தியாலயத்தில் உயர்தரதப் பரீட்சை எழுதுவதற்காக சென்றிருந்த நிலையில் சந்தேகத்தின்பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மஹஹில்ல இசுருபுர பெலிஅத்த பிரதேசத்தில் உள்ள விகாரையைச் சேர்ந்த பிக்குவே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை கைது செய்யப்பட்ட பிக்குவை புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருவதோடு, மேலதிக விசாரணைகளையும் ஆரம்பித்துள்ளனர்.