இரு ஆசிரியர்கள் பணி நீக்கம் – வினாப் பத்திரத்தின் இரண்டாம் பகுதி வழங்கவில்லை
கம்பஹா தக்ஷிலா கல்லூரியில் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்குப் பொறுப்பாக இருந்த பிரதம மற்றும் உதவி பரீட்சை மேற்பார்வையாளர்கள் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.
குறித்த பரீட்சை நிலையத்தில் பாடமொன்றுக்குத் தோற்றிய இரண்டு மாணவர்களுக்கு பாடத்துடன் தொடர்புடைய இரண்டாம் பகுதி வினாத்தாள் வழங்கப்படாததையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பரீட்சை மண்டபத்தில் பாடத்திற்கு இரு மாணவர்கள் மாத்திரம் தோற்றியிருந்த நிலையில், பரீட்சை மண்டபத்தில் இருந்த அதிகாரிகள் உரிய வினாத்தாளின் இரண்டாம் பாகத்தை தங்களுக்கு வழங்கவில்லை என இரு மாணவர்களும் பரீட்சை திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
முதல் வினாத்தாளின் விடைகளை எழுதி முடித்த இரண்டு மாணவர்களும் இரண்டாம் வினாத்தாளை தருமாறு பரீட்சை மண்டபத்தில் உள்ள ஆசிரியரிடம் கேட்ட போதும் வினாத்தாள் கிடைக்கவில்லை என பரீட்சை திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து குறித்த இரு அதிகாரிகளும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.