இலங்கை கல்வி நிர்வாக சேவை வெற்றிடங்கள் அதிகரித்துள்ளன.
இலங்கை கல்வி நிர்வாக சேவை வெற்றிடங்கள் அதிகரித்துள்ளன.
2016 முதல் இதுவரை கல்வி நிர்வாக சேவைக்கான உள்ளீர்ப்பு மேற்கொள்ளப்படாமையினால் இலங்கை கல்வி நிர்வாக சேவையில் வெற்றிடங்கள் அதிகரித்துள்ளதாக கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்தன பாராளுன்றில் தெரிவித்துள்ளார்.
வெற்றிடங்கள் காணப்படும் வருடங்களில் அவற்றை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் கோரப்படாமையினால் இந்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் ஹேஸா விதானகே வினவிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போதே கல்வி அமைச்சர் இவற்றைத் தெரிவித்தார்.
2020 மே 30 இல் இலங்கை கல்வி நிர்வாக சேவையின் 111 தரத்தில் மட்டுப்படுத்தப்பட்ட அடிப்படையில் 442 சேவை மூப்பு அடிப்படையிலும் 67 வெற்றிடங்களும் காணப்பட்டன. இவற்றை நிரப்ப வர்த்தமானி அறிவித்தல்கள் வெளியிடப்பட்டன.
இலங்கை கல்வி நிர்வாக சேவை திறந்த அடிப்படையில் 113 வெற்றிடங்களை நிரப்ப 2021 7. 16 ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.
இவற்றின் அடிப்படையில் பரீட்சை இடம்பெற்று அந்த வெற்றிடங்கள் நிரப்பப்படும் என்று கல்வி அமைச்சர் தெரிவித்தார்.
கோவிட் காரணமாக இப்பரீட்சைகளுக்கு பரீட்சைத் திணைக்களம் முன்னுரிமை வழங்க வில்லை என்றும் ஏனைய பாடசாலைப் பரீட்சைகளுக்கே முக்கியத்துவம் வழங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.
.