உயர் தரக் காலப்பகுதியில் மின்வெட்டு இல்லை

உயர் தரப் பரீட்சையின் போது மின்வெட்டு ஏற்படாமல் பார்த்துக்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

 2021 க.பொ.த  உயர்தரப் பரீட்சை பெப்ரவரி 07, 2022 இல் தொடங்கி மார்ச் 5 ஆம் தேதி முடிவடையும்.

 ஞாயிற்றுக்கிழமை (30) ஹோமாகம, கொடகமவில் 8 வீதிகளின் திறப்பு விழா மற்றும் நிறைவு விழாக்களில் கலந்து கொண்டு உரையாற்றும் போது கல்வி அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

 அதன்படி, க.பொ.த. உயர் தரப் பரீட்சை காலத்தில் மின்வெட்டு இருக்காது என நம்புவதாக அமைச்சர் குறிப்பிடுகிறார்.  

 கடந்த நவம்பர் மாதம் நடைபெறவிருந்த பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளையும் அமைச்சின் பணிப்புரையின் பேரில் பரீட்சைகள் ஆணையாளர் மேற்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

 பரீட்சை மற்றும் பெறுபேறுகளுக்கு இடைப்பட்ட காலத்தை குறைப்பதே தமது நோக்கம் என கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன குறிப்பிட்டுள்ளார். 

 க.பொ.த சாதாரண தரப் பரீட்சை மற்றும் உயர் தரப் பரீட்சை பெறுபேறு வெளியாகுவதற்கான காலப் பகுதியை குறைப்பதன் மூலம் விரைவில் பட்டம் பெற வாய்ப்பு ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

SHARE the Knowledge

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!