உயர் தரப் பரீட்சார்த்திகளுக்கு பரீட்சை ஆணையாளரின் அறிவித்தல்
உயர் தரப் பரீட்சையின் போது ஒவ்வொரு பரீட்சை நிலையத்திலும் இலத்திரனில் கடிகாரம் ஒன்றை சரியான நேரத்துடன் காட்சிப்படுத்த வேண்டும் என பரீட்சை மேற்பார்வையாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன குறிப்பிட்டுள்ளார்..
சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய பரீட்சைகள் ஆணையாளர் நாயகம், பரீட்சை நடைபெறும் ஒவ்வொரு வகுப்பறைக்கு பொறுப்பான ஆசிரியர்களின் ஊடாக சரியான நேரத்தை அறிந்து கடிகாரங்களில் நேரத்தை சரியாக அமைத்துக் கொள்ளுமாறு அவர் மாணவர்களிடம் கேட்டுக்கொண்டார்.
இதேவேளை, க.பொ.த உயர்தரப் பரீட்சை தொடர்பில் ஏதேனும் கேள்விகள் இருப்பின் 1911 என்ற இலக்கத்திற்கு அழைக்குமாறு தர்மசேன இங்கு கோரிக்கை விடுத்தார்.
மேலும், 011 2 784208/0112784 537 என்ற இலக்கங்களுக்கும் அழைக்கமுடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.