இவ்வருடம் ஓகஸ்ட் இல் நடாத்தப்படவேண்டிய க.பொ.த உயர் தரம் மற்றும் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை ஆகியவற்றை எதிர்வரும் நவம்பரில் நடாத்துவதற்கு பரீட்சைத் திணைக்களம் கவனம் செலுத்துகிறது.
இது தொடர்பாக கல்வி அமைச்சு மற்றும் பரீட்சைத் திணைக்கள அதிகாரிகள் பேச்சு நடாத்தியுள்ளதோடு, இதில் மாகாண, வலய அதிகாரிளும் கலந்து கொண்டிருந்ததாகவும் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்களின் கருத்துக்களை உள்வாங்கி இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதே நேரம், சாதாரண தர அழகியல் இவ்வாரம் வெளியிடப்படவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதோடு, மீள் திருத்த பெறுபேறுகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.