உயர் தரம் மற்றும் தரம் 5 பரீட்சைகள் தொடர்பாக கல்வி அமைச்சும் பரீட்சைத் திணைக்களமும் தெளிபடுத்தல்களை வழங்கும் என்று தான் எதிர்பார்ப்பதாக கல்வி மறுசீரமைப்பு அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார். அத்தோடு உயர் தரம் மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஆகிய இரண்டையும் சில காலம் பிற்போடப்பட வேண்டும் என்பது தமது தனிப்பட்ட கருத்தாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சிரிலங்கா பொதுஜன பெரமுண கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சான்த பண்டார எழுப்பிய வாய்மொழி மூல கேள்விகளுக்கு விடையளிக்கும் போதே கல்வி மறு சீரமைப்பு அமைச்சர் இவற்றைத் தெரிவித்தார்.
இந்தப் பரீட்சைகளை பிற்போடுமாறு பல கோரிக்கைகள் கிடைக்கப்பெற்றதைக் கருத்திற் கொண்டு தீர்மானம் எட்டப்படும் என்று அவர் தெரிவித்தார்.