எந்த அடக்குமுறையைக் கையாண்டாலும் 21 ஆம் திகதி ஆசிரியர்கள் பாடசாலைக்கு வரமாட்டார்கள் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோஸப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
200 பிள்ளைகளுக்கு குறைவான 3000 பாடசாலைகளை 21 ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கான பல்வேறு திட்டங்களை முன்கொண்டு செல்கிறது.
ஆசிரியர்கள் அதிபர்கள் தொழில்சங்கங்கள் ஈடுபட்டுள்ள போராட்டங்களை அடக்குவதற்கு அரசாங்கம் பல்வேறு உத்திகளையும் நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகிறது.
அரசாங்கம் எந்த வகையான அடக்குமுறைகளைக் கையாண்டாலும் தமது போராட்டத்தை அடக்க முடியாது என்று அவர் சூழுரைத்துள்ளார்.