ஒன்றரை லட்சம் அரசு ஊழியர்கள் பணிக்கு வரவில்லை

எரிபொருள் நெருக்கடியினால் ஏற்பட்டுள்ள போக்குவரத்து பிரச்சினை காரணமாக சுமார் 10 வீதமான அரச ஊழியர்கள் நேற்று (02) கடமைக்கு சமூகமளிக்கவில்லை என அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்

அரச ஊழியர்களின் மொத்த எண்ணிக்கை 1.5 மில்லியன், அவர்களில் சுமார் 1.5 லட்சம் பேர் பணிக்கு வரவில்லை என்று அந்த அதிகாரி கூறியுள்ளார்

இலங்கை போக்குவரத்து சபை மற்றும் புகையிரத சேவைகள் வழமை போன்று இயங்குகின்றன, ஆனால் 18,000 தனியார் பேருந்துகளில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே நேற்று இயக்கப்பட்டது.

அலுவலகப் போக்குவரத்திற்காகப் பயன்படுத்தப்படும் பேருந்துகளும் எரிபொருள் பெறுவதில் சிரமங்களை எதிர்கொள்வதால், அரச உத்தியோகத்தர்கள் கடமைக்குச் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது.

எரிபொருள் நெருக்கடி காரணமாக வாரத்தில் மூன்று அல்லது நான்கு நாட்கள் பணிக்கு அரச ஊழியர்களை மீள அழைப்பது தொடர்பில் கடந்த 21ஆம் திகதி தேசிய தொழிலாளர் ஆலோசனை சபையில் கலந்துரையாடப்பட்ட போதிலும் இதுவரை இறுதித் தீர்மானம் எட்டப்படவில்லை.

SHARE the Knowledge

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!