ஒன்லைன் பரீட்சைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
பெளத்த மற்றும் பாலி பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றியம், இன்று பல்கலைக்கழக நிர்வாகக் கட்டிடத்தின் முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டது.
ஒன்லைன் முறையில் பரீட்சைகளை நடாத்துவதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் மேற்கொண்ட தீர்மானத்தை அடுத்தே இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ஒன்லைன் முறையில் பரீட்சை நடாத்தினால் தமது மாணவர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்ளவர் என்று மாணவர் அமைப்பின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.