ஓய்வு பெற்றோர் வழக்கு மே 18 ம் திகதிக்கு ஒத்திவைப்பு.
2016-2019 காலப்பகுதியில் ஓய்வு பெற்றவர்களினால் மேன்முறையீட்டு நீதிமன்றத் தில் தொடுக்கப்பட்ட 148/2020வழக்கு இன்று பரீசீலனைக்கு எடுக்கப்பட்டது.
இதன்போது 15 அமைச்சரவை அமைச்சர்கள் சார்பாக அமைச்சரவை செயலாளர் ஆஜராவதாக சட்டமா அதிபர் அரச தரப்பு சட்டத்தரணிகள் நீதிமன்றில் அறிவித்தனர். இதனை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.
இதனையடுத்து விசாரணைக்காக மே 18ம் திகதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது என ஓய்வூதியதாரர்களின் உரிமைகளை பேணும் தேசிய இயக்க உப- தலைவர்
ஏ.எல்.எம். முக்தார் தெரிவித்தார்.