பாடசாலைகளில் கடமையாற்றும் கர்ப்பிணி ஆசிரியைகளுக்கு பொருத்தமான விசேட ஆடை யொன்றை அணிவதற்கு அனுமதி வழங்கும் விசேட சுற்றறிக்கை ஒன்றை கல்வி அமைச்சு வெளியிடவுள்ளது.
கர்ப்பிணி ஆசிரியைகள் வழமையான ஆடைகளை அணிந்து பாடசாலைக்கு வரும் போது எதிர்கொள்ளும் pசரமங்களைக் கருத்தில் கொண்டு கல்வி அமைச்சு இவ்வாறான ஆடையொன்றுக்கு அனுமதி வழங்க தீர்மானித்துள்ளது.