• Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact US
  • Advertise with Us
TeachMore
  • Home
  • News
  • CIRCULARS
  • COURSES
  • Applications
  • EXAMS & RESULTS
  • TEACHINGS
    • Modules for EB
    • கட்டுரைகள்
No Result
View All Result
  • Home
  • News
  • CIRCULARS
  • COURSES
  • Applications
  • EXAMS & RESULTS
  • TEACHINGS
    • Modules for EB
    • கட்டுரைகள்
No Result
View All Result
TeachMore.lk
Home செய்திகள்

கற்கைநெறிகளின் விருப்பொழுங்கை இன்று முதல் மாற்றலாம்.

June 19, 2021
in செய்திகள்
Reading Time: 2 mins read
Share on FacebookShare on WhatsAppShare on Telegram

ed

AL 2020 பல்கலைக்கழக விண்ணப்பம் தொடர்பாக


கற்கைநெறிகளின் விருப்பொழுங்கை இன்று முதல் மாற்றலாம்.
பல்கலைக்கழக அனுமதிக்கு ஒன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் தினம் நேற்றுடன் நிறைவடைந்தது.
எனினும் விண்ணப்பிக்காதவர்களுக்கு லொக்டவுன் முடிந்ததும் சில தினங்கள் வழங்கப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC) அறிவித்துள்ளது.
நேற்றுடன் ஒன்லைன் விண்ணப்பத் திகதி முடிவடைந்தாலும் விண்ணப்பித்தவர்கள் இன்றிலிருந்து ஒரு மாதம் வரை தமது கற்கை நெறி தொடர்பான விருப்பொழுங்கை மாற்றிக் கொள்ளலாம். இது வழமையான ஒரு நடைமுறையாகும்.
பல்கலைக்கழக அனுமதிக்காக இம்முறை என் மூலம் 64 மாணவர்கள் ஒன்லைன் விண்ணப்பங்களை சமர்ப்பித்திருந்தனர்.
ஒன்லைன் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் போது எதிர்நோக்குகின்ற தொழில்நுட்பப் பிரச்சினைகளை 1919 இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தீர்த்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அவ்விலக்கத்துடன் இலகுவில் தொடர்பு கொள்ள முடியாதிருந்ததுடன் தொடர்புபட்ட வேளைகளிலும் அவர்கள் முறைப்பாட்டைப் பெற்று ஆணைக்குழுவுக்கு அறிவிப்பவர்களாகவே இருந்தனர்.
அதேவேளை ஆணைக்குழுவின் ஏராளமான தொடர்பு இலக்கங்களில் ஒரு இலக்கத்துடன் கூட எந்தவொரு அழைப்புக்கும் பேசக்கூடியதாக இருக்கவில்லை. இதனால் சில மாணவர்களுடைய ஒன்லைன் விண்ணப்பப் பிரச்சினைகள் தீரவில்லை. 
நான் விண்ணப்பித்த 64 மாணவர்களில் ஒரு மாணவருடைய பிரச்சினைக்கு இன்னும் தீர்வு பெறப்படவில்லை. இவ்வாறு நாடளாவிய ரீதியில் பல மாணவர்கள் உள்ளனர். பின்னர் இவற்றைத் தீர்த்துக் கொள்ளலாம் என்றாலும் மாணவர்களுடைய மனோ நிலையை அவ்வளவு இலகுவில் சீர்செய்துவிட முடியாது.
இதுவரை விண்ணப்பிக்காதவர்களுக்கு ஒன்லைன் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க பின்னர் வழங்கப்படவிருக்கும் காலப் பகுதியில் மாணவர்கள் பின்வரும் தகவல்களை தயார்படுத்தி வைத்துக் கொள்ளவும்.
1.பெயர்
2.முகவரி
3.தொலைபேசி இல.
4.AL சுட்டெண் (முன்னைய AL சுட்டெண்கள்)
5.OL சுட்டெண்கள் (ஆண்டுகளுடன்)
6.பாடசாலையில் சேர்ந்த திகதி 
7.தந்தையின் முழுப்பெயர்
8.தாயின் முழுப்பெயர்
9.அடையாள அட்டையின் 2 பக்க இமேஜ்
10.கற்கை நெறிகளின் விருப்பு முன்னுரிமை
தனிப்பட்ட பரீட்சார்த்திகள்
1.பாடசாலை விடுகைப் பத்திரத்தையும் 
2.கிராம சேவகரின் வதிவிட சான்றிதழையும் 
லொக்டவுன் நீங்கியதும் பிறகு பெற்று அனுப்பலாம்.
அதேவேளை ஒன்லைன் விண்ணப்பங்களை சமர்ப்பித்தவர்கள் பின்வருமாறு செயற்படுங்கள்.
1. உங்களது பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பம் தேசிய அடையாள அட்டையின் ‘ஸ்கேன்’ பிரதியுடன் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் (UGC) தரவுத் தளத்திற்கு ‘ஒன்லைன்’ மூலம் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும். அதற்கான இறுதித் தினமே நேற்றுடன் முடிவடைந்துள்ளது.
2. அதன் pdf வடிவம் உங்களுக்குக் கிடைக்கப் பெற்றிருக்கும். அதனை ‘பிரிண்ட்’ எடுத்துக் கொள்ளுங்கள். (6 பக்கங்கள்)
4. அப்பிரதியின் 3 மற்றும் 4 ஆம் பக்கங்களில் திகதியும் கையொப்பமும் இட்டு (முடிந்தால்) அதிபரின் கையொப்பத்தையும் பெற்றுக் கொள்ளுங்கள். 
5. க.பொ.த. (சா/த) பரீட்சைப் பெறுபேற்றை போட்டோ பிரதி (Photo copy) எடுத்து அதிபரிடம் அல்லது சமாதான நீதவானிடம் கையொப்பம் பெறுங்கள். 
6.அதன் இரு பக்க மேல் வலது புறத்தில் ‘பிரிண்ட்’ எடுத்த உரிய ‘பார் கோட்’ களை ஒட்டிக் கொள்ளுங்கள்.
6. இப்போது விண்ணப்பப்படிவப் பிரதிகள் மற்றும் ஆவணங்கள் அனைத்தையும் ‘ஸ்கேன்’ செய்து அல்லது ஒழுங்கான போன் கெமராவில் (Phone Camera) போட்டோ எடுத்து அவற்றை [email protected] எனும் ஈ மெயில் முகவரிக்கு (முடிந்தால்) உங்கள் ஈ மெயிலிலிருந்து அனுப்பி வையுங்கள்.
7. பின்னர் அவற்றை A4 கவரிலிட்டு பதிவுத் தபாலில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் (UGC) பின்வரும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
The Senior Assistant Secretary
(University Admissions),
University Grants Commission,
20, Ward Place,
Colombo 7.
தனிப்பட்ட பரீட்சார்த்திகள் மேலதிகமாக 
1. விண்ணப்பப் பத்திரத்தின் 5 ஆம் பக்கத்திலும் கையொப்பமிட்டு சமாதான நீதவானிடம் கையொப்பம் பெற்றுக் கொள்ளுங்கள்.
2. GS இன் வதிவிடச் சான்றிதழ், பாடசாலையின் அல்லது மத்ரசாவின் விடுகைப் பத்திரம் ஆகியவற்றின் ஒரிஜினல் ஆவணங்களின் இரு பக்க மேல் வலது புறத்தில் ‘பிரிண்ட்’ எடுத்த உரிய ‘பார் கோட்’ களை ஒட்டிக் கொள்ளுங்கள்.
விண்ணப்பித்தவர்கள் ஈ மெயில் முகவரி (ID), பாஸ்வேட் மற்றும் பல்கலைக்கழக விண்ணப்பத்திற்கான ஒன்லைன் பாஸ்வேட் ஆகிய மூன்றையும் பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள்.
இவற்றை பிறருக்கு காண்பிப்பதைத் தவிர்ப்பதுடன் பல்கலைக்கழகம் தெரிவு செய்யப்பட்டு பதிவு செய்யும் வரை மிகக் கவனமாக வைத்திருங்கள். அவ்வாறே குறித்த தொலைபேசி இலக்கமும் இறுதி வரை முக்கியமானது.
சந்தேகங்களுக்கும் ஆலோசனைகளுக்கும் வட்சப் குரல் பதிவு மூலம் தொடர்பு கொள்ளவும்.
Muhuseen Raisudeen
0714443619

Related

Previous Post

கொரோனா முடக்கத்தின் விளைவினால் அதிகரித்து வரும் மறைமுக பாதிப்புகள்

Next Post

போட்டிக் கல்வி வழங்கும் பாடசாலையாக முன்பள்ளிகளை மாற்றி விட வேண்டாம்!

Related Posts

Announcement on Graduate Teaching Application

Announcement on Graduate Teaching Application

February 2, 2023
Complaint of a student appearing in A/L examination

Complaint of a student appearing in A/L examination

February 2, 2023
VRS system to reduce government Servants

VRS system to reduce government Servants

February 2, 2023
Issues related National College of Education Interview – Commissioner is to be sucked

Issues related National College of Education Interview – Commissioner is to be sucked

February 1, 2023
Next Post

போட்டிக் கல்வி வழங்கும் பாடசாலையாக முன்பள்ளிகளை மாற்றி விட வேண்டாம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Page

WhatsApp Group

Telegram Group

Recent Posts

School of Leadership and organizational Management online Programmes -Miloda

October 29, 2020

தரம் 1 மாணவர் அனுமதிக்கான திருத்தங்களுடனான சுற்றுநிருபம் இன்று அமைச்சரவைக்கு

May 17, 2021

ஒரு லட்சம் வேலை வாய்ப்பு – மே மாதமே நியமனம்

March 2, 2020
TeachMore.lk

Help Menu

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact US
  • Advertise with Us

Main Menu

  • Home
  • News
  • CIRCULARS
  • COURSES
  • Applications
  • EXAMS & RESULTS
  • TEACHINGS
    • Modules for EB
    • கட்டுரைகள்

Recent Posts

  • Advanced Certificate in Science programme (ACS)
  • Bachelor of Science (BSc)
  • Bachelor of Arts (BA) (Hons) in Library and Information Studies (LIS) – 2023

© 2022 Teachmore.lk

No Result
View All Result
  • Home
  • News
  • CIRCULARS
  • COURSES
  • Applications
  • EXAMS & RESULTS
  • TEACHINGS
    • Modules for EB
    • கட்டுரைகள்

© 2022 Teachmore.lk

error: Content is protected !!