• Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact US
  • Advertise with Us
TeachMore
  • Home
  • News
  • CIRCULARS
  • COURSES
  • Applications
  • EXAMS & RESULTS
  • TEACHINGS
    • Modules for EB
    • கட்டுரைகள்
No Result
View All Result
  • Home
  • News
  • CIRCULARS
  • COURSES
  • Applications
  • EXAMS & RESULTS
  • TEACHINGS
    • Modules for EB
    • கட்டுரைகள்
No Result
View All Result
TeachMore.lk
Home Uncategorized

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 25வது பொதுப்பட்டமளிப்பு விழா!!

March 10, 2022
in Uncategorized
Reading Time: 1 min read
MEME 20220310 102840 edit 125901366735476
Share on FacebookShare on WhatsAppShare on Telegram

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 25வது பொதுப்பட்டமளிப்பு விழா
எதிர்வரும் மார்ச் மாதம் 12ஆம், 13ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளதாக கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வந்தாறுமூலை வளாகத்தில் 09 திகதி இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது கிழக்குப்பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் வல்லிபுரம் கனகசிங்கம் தெரிவித்துள்ளார்.

அவர் இதன்போது மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

கிழக்குப்பல்கலைக்கழகத்தின் வேந்தர் வைத்திய கலாநிதி வேல்முருகு விவேகானந்தராஜா அவர்களது தலைமையில் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நல்லையா கேட்போர் மண்டபத்தில் இடம்பெறவுள்ள பொதுப்பட்டமளிப்புவிழாவின்போது
இம்முறை 1958 உள்வாரி மற்றும் வெளிவாரி பட்டதாரி மாணவர்களுக்கும், பட்டப்பின் தகைமை பெறுபவர்களுக்கும், கௌரவப் பட்டம் பெறுபவர்களும் தமக்கான பட்டத்தினை பெறவுள்ளனர்.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கல்வியமைச்சின் செயலாளர் சிரேஷ்ட பேராசிரியர் கே.கபில பெரேரா அவர்களும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உப தவிசாளர் சிரேஷ்ட பேராசிரியர் சந்தன பீ.உடவத்த அவர்களும் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளார்கள்.

இம்முறை கிழக்குப்பல்கலைக்கழகத்தால் இப்பல்கலைக்கழகக்தின்
காலஞ்சென்ற முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சிவசுப்ரமணியம் ரவீந்திரநாத் அவர்களின் சேவையினை நினைவு கூர்ந்து கௌரவ விஞ்ஞான
கலாநிதிப்பட்டமும் மட்டக்களப்பின் மூத்த எழுத்தாளரும் சமூகவியலாளருமான
வெல்லவூர்க்கோபால் என்றழைக்கப்படும் சீனித்தம்பி கோபாலசிங்கம் அவர்களின் சேவையினைப் பாராட்டி கௌரவ முது இலக்கியமாணிப் பட்டமும்
வழங்கப்படவிருப்பது மிகவும் முக்கியமான விடயமாக கருதப்படுகின்றது.

கிழக்குப்பல்கலைக்கழக வரலாற்றில் முதல்முறையாக 1958 மாணவர்களுக்கான
பொதுப்பட்டமளிப்பு நிகழ்வு நடாத்தப்படுவது இதுவே முதல் தடவையாகும்.

இந்நிகழ்வில் வணிக நிர்வாகத்தில் முதுமாணி (MBA), முதுகலைமாணி (MA), முதுகல்விமாணி(MEd), அபிவிருத்திப் பொருளியலில் முதுமாணி (MDE) ஆகிய
133 பட்டப்பின் தகமைகளுக்கான பட்டங்களும், 2 கௌரவப் பட்டங்களும்
முதலாம் நாள் முதலாவது அமர்வில் வழங்கப்படவுள்ளன.

ஏனைய இளமாணிப்
பட்டங்களுக்காக 2வது அமர்வில் 408 பட்டதாரி மாணவர்களும், 3வது அமர்வில் 340 பட்டதாரி மாணவர்களும், இரண்டாம் நாள் நிகழ்வில் முதலாவது அமர்வில் 330 பட்டதாரி மாணவர்களும், 2வது அமர்வில் 360 பட்டதாரி மாணவர்களும், 3வது அமர்வில் 385 பட்டதாரி மாணவர்களும் பட்டமளித்து கௌரவிக்கப்படவுள்ளனர் என அவர் இதன்போது தெரிவித்திருந்தார்.

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 25வது பொதுப்பட்டமளிப்பு விழா தொடர்பான குறித்த ஊடக சந்திப்பின்போது
பட்டமளிப்பு விழா குழு தலைவர் பேராசிரியம் எம்.சிதம்பரேசன்,
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் ஏ.பகீரதன், சிரேஸ்ட உதவிப் பதிவாளர் (கல்விப் பிரிவு) திருமதி.நிசாந்தினி நிருமிதன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related

Previous Post

தரம் ஒன்று: மாணவர்களை இனங்காணல் செயற்பாடு

Next Post

மித்துறு பியஸ வீட்டு வன்முறைகளால் பதிக்கப்பட்டவர்களுக்கு ஆலோசனைச் சேவை

Related Posts

Salary not enough for living expenses – Joseph Stalin

Salary not enough for living expenses – Joseph Stalin

September 20, 2022
Salaries of teachers and public servants are not enough. We will start Aragalaya again

Salaries of teachers and public servants are not enough. We will start Aragalaya again

September 18, 2022

Papers of Grade 5 Scholarship and GCE (O/L) exam based on Essential Learning Content

September 9, 2022
Aptitude test

APTITUDE TEST for BACHELOR OF SCIENCE IN INFORMATION TECHNOLOGY DEGREE PROGRAMME AT THE RAJARATA UNIVERSITY OF SRI LANKA AND THE UNIVERSITY OF VAVUNIYA

September 4, 2022
Next Post
5t

மித்துறு பியஸ வீட்டு வன்முறைகளால் பதிக்கப்பட்டவர்களுக்கு ஆலோசனைச் சேவை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Page

WhatsApp Group

Telegram Group

Recent Posts

WhatsApp இல் வரும் Video Link களை பார்வையிட புதிய வசதி அறிமுகம்

December 21, 2018

BA Degree (External – New Syllabus) – New Supplementary Course Units

May 31, 2019

ஜூலை மாதத்தில் உலகில் வரலாறு காணாத வெப்பம்

August 7, 2019
TeachMore.lk

Help Menu

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact US
  • Advertise with Us

Main Menu

  • Home
  • News
  • CIRCULARS
  • COURSES
  • Applications
  • EXAMS & RESULTS
  • TEACHINGS
    • Modules for EB
    • கட்டுரைகள்

Recent Posts

  • Holiday for Muslim schools from Tuesday
  • Admission for university vacancies to be completed before 15th February
  • Courses in Textile & Apparel Technology – Sri Lanka Institute of Textile and Apparel (SLITA)

© 2022 Teachmore.lk

No Result
View All Result
  • Home
  • News
  • CIRCULARS
  • COURSES
  • Applications
  • EXAMS & RESULTS
  • TEACHINGS
    • Modules for EB
    • கட்டுரைகள்

© 2022 Teachmore.lk

error: Content is protected !!