கிழக்கு மாகணத்தில் உயர் தரம் சித்தியடைந்தவர்களை ஆசிரியர்களாக நியமிக்க நடவடிக்கை

கிழக்கு மாகாணப் பாடசாலைகளில் நிலவும் ஆசிரிய வெற்றிடங்களை நிரப்ப உயர் தரப் பரீட்சையில் சித்தியடைந்தவர்களை ஒப்பந்த அடிப்படையில் ஆசிரியர்களாக நியமிப்பதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

உயர் தரப் பரீட்சையின் பெறுபேறுகளில் பல்கலைக்கழக அனுமதித் தகுதி பகுதியில் ஆம் எனக் குறிப்பிடப்பட்டவர்களது தகவல்களை கிழக்கு மாகாண கல்வி அமைச்சு சேகரிக்க ஆரம்பித்துள்ளது.

அது தொடர்பான அறிவிப்பை கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எச்.ஈ.எம்.டப்ளியு. ஜி. திஸாநாயக்க விடுத்துள்ளார்.

2018 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை உயர் தரம் எழுதியவர்களில் பல்கலைக்கழக அனுமதிக்கான தகைமைப் பகுதியில் ஆம் எனக் குறிப்பிடப்பட்டிருக்கும் பெறுபேற்றைக் கொண்டவர்களின் தகவல்கள் சேகரிக்கப்படுவதாக அவர் அறிவித்துள்ளார்.

அத்தோடு இவர்கள் ஆசிரயிர் பற்றாக்குறை தீவிரமாக நிலவும் பாடசாலைகளில் ஆசிரியர்களாக நியமிக்க எதிர்பார்க்கப்பதாகவும் அவர் தெரிவித்தள்ளார்.

இது தொடர்பான தகவல்களை மார்ச் 15க்கு முன்னர் தமக்கு அனுப்பி வைக்குமாறு கிழக்கு மாகாணத்தின் கல்வி வலயங்களது பணிப்பாளர்களுக்கு, செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

SHARE the Knowledge

17 thoughts on “கிழக்கு மாகணத்தில் உயர் தரம் சித்தியடைந்தவர்களை ஆசிரியர்களாக நியமிக்க நடவடிக்கை

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!