கொழும்பு பிரதான பாடசாலைகளில் கொரோனா
கொழும்பு பிரதான பாடசாலைகளின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளதை அடுத்து, அப்பாடசாலைகளின் பல வகுப்புக்கள் மூடப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோஸப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு 10 பிரதான பாடசாலைகளில் பதிவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பைக் கொண்டிருந்த பலர் தனிமைப்படுத்தப்பட்டு்ளள போதிலும், பாடசாலைகளுக்கு வருகை தரும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை பாதுகாக்க பொருத்தமான வழிமுறை கடைப்பிடிக்கப்படவில்லை என அவர் குற்றம்சாட்டியுள்ளார். இந்நிலமை கவலைக் குரியது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.