சுகாதார துறையினரின் சம்பளத்தை பத்திரிகையில் வெளியிடுவேன்- சுகாதார அமைச்சர்.

 சுகாதார துறையினரின் சம்பளத்தை பத்திரிகையில் வெளியிடுவேன்- சுகாதார அமைச்சர்.

சம்பளப் பிரச்சினை தொடர்பில் போராடும் சுகாதாரத்துறையில் பணியாற்றுபவர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பான விபரங்கள் பத்திரிகைகளில் முழுப் பக்கமாக வெளியிடுவேன்  என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல அருண பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்தார்.

ஆசிரியர்களின் சம்பள உயர்வுடன்  தாதியர்களின் சம்பள முரண்பாடு என்பது வேலை நிறுத்தத்தின் முக்கிய  கோரிக்கையாக உள்ளது. அதைப் பற்றி பேசவே வேண்டாம் என்று சொன்னேன். ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினையை தாதியர்களின் சம்பளப் பிரச்சினையுடன் ஒப்பிட முடியாது. ஆசிரியர் சம்பளப் பிரச்சினையின் பின்னணியும் தனியானது.

‘தற்போது சுகாதாரத் துறையில் இருப்பவர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் குறித்து இன்னும் சில நாட்களில் பத்திரிகையில் முழுப் பக்க விளம்பரம் வெளியிடப்படும். அப்போது எல்லோருக்கும் இவர்களின் சம்பளம் பற்றி ஒரு ஐடியா கிடைக்கும். 

சராசரி தாதியர் சுமார் 400 மணி நேரம்  மேலதிக நேரம் (OT) வேலை செய்கிறார். 150 மணி நேரம் எடுத்துக் கொண்டால், மூன்றாம் தர தாதியர் ( third grade) சாதாரணமாக 1,02,000 ரூபா. ,  ஒரு முதல் தர (first grade) தாதியருக்கு ரூ.180,000 செலவாகும். 

 

இதில் வீதியில் இறங்கி போராட்டம் நடத்துகின்றனர். கல்வித்துறை வழங்கும் சம்பளத்திற்கு இணையான சம்பளத்தை இவர்களுக்கு வழங்குவதாக இருந்தால் வழங்க முடியாது. தற்போது நாட்டின் தேசிய வருமானத்தில் 72% சம்பளம் மற்றும் ஓய்வூதியத்திற்காக செல்கிறது என்றார்.

SHARE the Knowledge

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!