தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு இன்னும் இரு நாட்களில்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இன்னும் இரண்டு நாட்களுக்குள் வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பெறுபேறுகளை வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த வருடம் 340,508 பரீட்சார்த்திகள் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர்.

இன்று மாலை பெறுபேறுகளை வெளியிடுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியதாகத் தெரிவித்ததை அடுத்து, பரீட்சைப் பெறுபேறுகள் இன்று மாலை வெளிவரும் என எதிர்பார்க்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

-நியுஸ் பெஸ்ட்-

SHARE the Knowledge

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!