தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை விடைப்பத்திரம் திருத்தம் இன்று முதல்

நடைபெற்று முடிந்த தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை விடைப்பத்திரங்களைத் திருத்தும் பணிகள் இன்று ஆரம்பமாகின்றன. 

இப்பணிகள் எதிர்வரும் 5 ஆம் திகதி வரை நீடிக்கும் என பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. 

ஏனைய வருடங்களில் ஆகஸ்ட் மாதம் இடம்பெறும் இப்பரீட்சை 2011 ஆம் ஆண்டில் பல தடவைகள் பிற்போடப்பட்டு கடந்த ஜனவரி 22 ஆம் திகதி இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. 

இப்பரீட்சையின் போது நடைபெற்றதாகக் கூறப்படும் அநீதிகள் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள அதே வேளை வினாப் பத்திரங்களின் தரம் தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

SHARE the Knowledge

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!