தற்கொலை குண்டுத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சுரக்ஷா காப்புறுதிக் கொடுப்பனவு வழங்கப்பட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.
இந்த துரதிஷ்டமான சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கம் வழங்கும் இழப்பீட்டுக் கொடுப்பனவுகளுக்கு மேலதிகமாக சுரக்ஷா கொடுப்பனவுகள் வழங்கப்பட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
சுரக்ஷா காப்புறுதிக் கொடுப்பனவுகளை இவ்வருடம் இரட்டிப்பாக்கியுள்ளமையினால் இரு ஒரு நிவாரணமாக அமையும் என அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
பாடசாலை ஆரம்பமாகியவுடன் பாதிக்கப்பட்ட மாணவர்கள் தொடர்பான மதிப்பீடுகளை துரிதப்படுத்துவதாக அவர் தெரிவித்தார்.