தாதியர் சங்கத்தின் போராட்டம் கைவிடப்படுகிறது.
பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரச தாதிய ஊழியர்கள் தமது போராட்டத்தை தற்காலிகமாக கைவிட தீர்மானித்துள்ளதாக சங்கத்தின் தலைவர் சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ளார்.
நீதிமன்ற உத்தரவிற்கு அமைய போராட்டத்தை தற்காலிகமாக கைவிட தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
போராட்டத்தைக் கைவிடுமாறு அரச தாதியர் சங்கத்திற்கும் அதன் தலைவர் சமன் ரத்னபிரியவுக்கும் நேற்று நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருந்த்து.
எனினும், ஏனைய தொழிற்சங்க ஊழியர்களின் போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.