வினைத்திறன்காண் தடைதாண்டல் பரீட்சைகளுக்கான (SLEAS- EB) திறந்த நூல் சோதனை- (Open book test) முன்னோடி சோதனைக்கான (pilot test) முன்னோடிப் பரீட்சையும் செயலமர்வும் – 2021
பரீட்சை திணைக்களம் எதிர்வரும் காலத்தில் EB பரீட்சைகளை திறந்த நூல் சோதனையாக நடாத்துவதற்கான திட்டத்தை முன்னெடுக்கவுள்ளது. இதன் முன்னோடி சோதனை ஒன்றை இலங்கை கல்வி நிர்வாக சேவை தடைதாண்டல் பரீட்சைக்கான முன்னோடிப் பரீட்சை ஒன்றை எதிர்வரும் 24 ஆம் திகதி கொழும்பு றோயல் கல்லூரியில் நடாத்துகிறது.
இதற்கான அனுமதி அட்டைகளை அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த முன்னோடித் திட்டம் வெற்றியளிக்கும் போது எதிர்காலத்தில் இவ்வாறான திறந்த நூல் பரீட்சையை முன்னெடுக்கப்படும் என்று தெரியவருகிறது.