இவ்வருட வரவு செலவுத் திட்டத்தில் முதல் கட்டம்
அடுத்த வருடம் ஏனைய இரு கட்டமும்
தொழில் சங்க போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் அதிபர்களுக்கும் பிரதமருக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை சில ஆரோக்கிமான முடிவுகளோடு முடிவடைந்துள்ளதாக அறிய முடிகிறது.
தற்போது பிரேரிக்கப்பட்டுள்ள சம்பள அதிகரிப்பு மூன்று கட்டங்களாக வழங்காது, அதனை மூன்றாகப் பிரித்து ஒரு பகுதியை இவ்வருடமும் அடுத்த இரு பகுதிகளையும் அடுத்த வரவு செலவுத்திட்டத்திலும் வழங்குவதாக பிரதமர் தலைமையில் கலந்துகொண்ட அரச அதிகாரிகள் உறுதி வழங்கியுள்ளதாக ஆசிரிய தொழில்சங்கங்கள் அறிவித்துள்ளன.
எனினும், இது தொடர்பாக தமது தீர்மானத்தை உடனடியாக கூற முடியாது என்று தெரிவித்துள்ள தொழில்சங்கங்கள், நாளை இது தொடர்பாக கலந்துரையாடி பொருத்தமான தீர்மானத்தை அறிவிப்பதாகவும் அது வரை தற்போது இடம்பெறும் போராட்டம் தொடரும் என்றும் தொழில்சங்கங்கள் அறிவித்துள்ளன.
இப்பேச்சுவார்தை நண்பகல் 12.30 முதல் மாலை 3.20 வரை இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.