தொழிற்சங்க நடவடிக்கைகள் இடைநிறுத்தம்
சுமார் 2000 தொழிற்சங்கங்கள் இணைந்து ஆரம்பித்த தொழிற்சங்க நடவடிக்கைகளை இடைநிறுத்துவதாக தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையத்தின் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
அரச, அரச சார்பற்ற மற்றும் தனியார் தொழிற்சங்கங்கள் இணைந்து ஜனாதிபதி ராஜபக்ஸ பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி தொழிற்சங் நடவடிக்கைகளை ஆரம்பித்திருந்தன.
எனினும், நாட்டின் நிலமையைக் கருத்திற் கொண்டு தொழிற்சங்க நடவடிக்கைகளை இடைநிறுத்துவதாக வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.