தேசிய கல்வியியல் கல்லூரி புதிய மாணவர்களின் கற்றலை ஆரம்பித்தல்
தேசிய கல்வியியல் கல்லூரிகளின் கற்றல் நடவடிக்கைகள் தொடர்பாக பின்வரும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு பீடாதிபதிகளுக்கு அறிவித்துள்ளது.
1. மாணவர் உள்ளீர்ப்பு
2022.03.31 க்கு முன்னர் நேர்முகத் தேர்வுகளை முடித்து மாணவர்களை உள்ளீர்ப்புச் செய்ய வேண்டும்
2. தற்போது உள்ளீர்ப்புச் செய்யப்பட்ட மாணவர்கள் 2022.03.06 க்கு முன்னர் விடுதிகளுக்கு வரவழைக்க வேண்டும் அத்தோடு 2022.03. 07 இலிருந்து 2022.03.12 வரை கல்வியியல் கல்லூரிகளினுள் திசைமுகப்படுத்தல் இரண்டாம் கட்ட நிகழ்ச்சித் திட்த்தை ஆரம்பிக்க வேண்டும் என்பேதாடு மாணவர்கள் 2022.03.14 ஆம் திகதியிலிருந்து கற்கைகள் ஆரம்பிக்க வேண்டும்.
3. புதிய மாணவர்களை விடுதிகளுக்கு அனுமதிக்கு முன்னர், விடுதி, சாப்பாட்டு அறை, முதலானவற்றை தொற்று நீக்கம் செய்ய வேண்டும்.
4. மாணவர்கள் அனைவருக்கும் கொவிட்19 தடுப்பூசி மூன்றும் செலுத்திக் கொண்டு வருவதற்கும் மற்றும் ரெபிட் அன்டிஜன் பரிசேதைன செய்து கொள்வதற்கும் ஆலோசனை வழங்க வேண்டும்
I’m interested
Please contact me
Thank you
How to apply