தேசிய கல்வியியல் கல்லூரிக்கு மாணவர்கள் இல்லை
ஆசிரியர் பயிற்சிக்காக தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு நுழையும் மாணவர்களின் எண்ணிக்கையில் அதிகளவான வீழ்ச்சி காணப்பபவதனால், பாடநெறிகளை ஆரம்பிப்பது தொடர்பில் கல்வி அமைச்சு பாரிய சிக்கலை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆங்கில மொழி மூல விஞ்ஞான பாடநெறிக்கு ஆண்டுதோறும் இருபது மாணவர்கள் பதிவு செய்யப்படுகின்றனர், ஆனால் இம்முறை ஒரு மாணவர் மட்டுமே தகுதி பெற்றுள்ளார்.
மேலும், ஆங்கில வழிக் கணிதப் பாடத்திற்கு நாற்பத்தைந்து மாணவர்களைத் தெரிவு செய்வதற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்த நிலையில், இம்முறை இருபத்தி ஒன்பது பேரே தகுதி பெற்றுள்ளனர்.
நில்வலா கல்வியியல் கல்லூரியில் விஞ்ஞான பாடநெறிக்கு 73 மாணவர்கள் தெரிவு செய்யப்படவுள்ள போதிலும், எட்டு மாணவர்களே இம்முறை தகுதிபெறவுள்ளனர். கணித பாடத்திற்கு 65 மாணவர்கள் தெரிவு செய்யப்படுகின்றபோதிலும் இம்முறை பன்னிரண்டு பேர் மாத்திரமே தகுதிபெற்றுள்ளனர்.
மேலும் புலிதிசிபுர கல்வியில் கல்லூரியில் விவசாய கற்கைநெறிக்கு 60 மாணவர்கள் தேவைப்பட்ட போதிலும் 36 பேர் மாத்திரமே பாடநெறிக்குத் தகுதிபெற்றுள்ளனர். 45 மாணவர்கள் சியானே பீடத்தில் ஆங்கிலப் பாடநெறிக்குத் தெரிவு செய்யப்பட வேண்டியிருப்பினும் இவ்வருடம் 29 பேரே தகுதி பெற்றுள்ளனர்.
ஆறு நேர்காணல் சுற்றுக்களை முடித்த பின்னரும் தேவையான மாணவர்களை பெற்றுக் கொள்ள முடியவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இம்முறை உள்வாங்கப்படவுள்ள மாணவர்கள் 2018 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் என்பதாலேயே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
2018 ஆம் வருட க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்து பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி பெறாத மாணவர்கள் ஏனைய உயர் கல்வி நிறுவனங்களை நாடியுள்ளமையினால், தேசிய கல்வியில் கல்லூரி பிரவேசத்திற்கான விண்ணப்பம் குறைவடைந்துள்ளதாகவும் இதன் விளைவுகளின் தீவிரம் இன்னும் மூன்று வருடங்களில் உணரப்படும் எனவும் அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அருண