தேசிய கல்வியியல் கல்லூரி நடவடிக்கைகளை தொடர்பாக கல்வி அமைச்சு, கல்வியியல் கல்லூரியின் பீடாதிபதிகளுக்கு அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.
இதில் தற்போது கற்கும் மாணவர்களுக்கும் புதிதாக இணைந்து கொள்ளவுள்ளவர்களுக்கும் கற்றல் எவ்வாறு முன்னெடுக்கப்படும் என்பது தொடர்பாக விளக்கப்பட்டுள்ளது.
2017/2019 குழு (கட்டுறுப் பயில்வை முடித்த மாணவர்களுக்கு)
இவர்களுக்கு, தேசிய கல்வி நிறுவகத்தின் முன்னெடுப்புடன் இறுதிப்பரீட்சைக்காக உடன்பட்ட முறைமையை நடைமுறைப்படுத்தப்படும்
2018/2020 குழு (இரண்டாம் வருட பயிலுனர்கள்)
இவர்களின் இரண்டாம் வருட பாடெநறி நவடிக்கைகள் 2021 ஒக்டோபர் 21 ஆம் திகதி முடிவடைவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், அதன் பின்னர் கட்டுறுப்பயில்வுக்காக பாடசாலைகளில் இணைப்புச் செய்யப்படுவர். பாடசாலைகள் திறக்கப்படும் ஒழுங்கின் அடிப்படையில் இது தொடர்பாக பின்னர் அறிவிக்கப்படும்.
அது வரை கற்றல் கற்பித்தல் நடைபெறும்.
2020/2022 குழு (புதிதாக இணைத்துக் கொள்ளப்படவுள்ளவர்கள்)
1. 2018/2020 குழுவிற்காக 2016 மற்றும் 2017 வருடங்களில் உயர் தரப் பெறுபேறுகளின் அடிப்படையில் இரு குழுக்களும் ஒரேதடவையில் உள்ளீர்க்கப்படவுள்ளதால், 2018 ஆம் ஆண்டு பெறுபேறுகளின் அடிப்படையில் உள்ளீர்க்கப்பட்டவர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டதன் படி, 2020/2022 குழு என்று அடையாளப்படுத்தப்படும்
2. தெரிவுசெய்யப்படுவதற்கு தேவையான தகைமைகளை பூரணப்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டு விண்ணப்பதாரிகளுக்கு 2021.07.13 ஆம் திகதியிடப்பட்ட கடிதத்திற்கு ஏற்ப, ஒவ்வொரு பாடநெறிக்கும் தனித்தனி கல்லூரிகளாக வகைப்படுத்துவது நேர்முகப்பரீட்சை நடாத்திய கல்லூரிகளைச் சாரும். எனவே, நேர்முகப் பரீட்சையின் போது தொகுக்கப்பட்ட ஆவணங்களை கல்லூரிகள் அமைச்சுக்கு அனுப்பி வைக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
11. தெரிவு செய்யப்பட்டுள்ள அனைத்து விண்ணப்பதாரிகளுக்கும் அவர்கள் வசிவிட பிரதேசத்திற்கு அண்மையை கருத்திற் கொண்டு பாடநெறி நடைபெறும் கல்லூரியைக் கருத்திற் கொண்டு பாடநெறி நடைபெறும் அனைத்து கல்லூரிகளுக்கும் நியாயமாகப் பிரிந்து செல்லும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். அத்தோடு பதிவுகள் தொடர்பாக அறிவிக்க வேண்டும்
111. எஞ்சியுள்ள வெற்றிடங்களை நிரப்பும் நடவடிக்கையை, நாட்டின் நிலமை சீரடைந்தபின்னர், சுகாதார நெறிமுறைககளைக் கடைப்பிடித்து, விரைவில் மேற்கொள்ளுவதற்கு முன்னுரிமை வழங்க வேண்டும்