தேசிய கல்வியியல் கல்லூரி டிப்ளோமாதாரிகள் நியமனம் கோரி போராட்டத்திற்கு தயார்
தேசிய கல்வியியல் கல்லூரி டிப்ளோமாதாரிகள் நியமனம் கோரி போராட்டத்திற்கு தயார்.
தேசிய கல்லூரி டிப்ளோமாதாரிகள் தமக்கான நியமனம் தாமதமடைவடைவதைக் கண்டித்தும் விரைவில் நியமனங்களை வழங்க்க் கோரியும் போராட்டத்தில் ஈடுபட தயாராக உள்ளதாகாக 2017/2019 குழுவின் தலைவர் சங்கைக்குரிய நாத்தன்வெல விமரசிரி தேர்ர் தெரிவித்துள்ளார்.
டிப்ளோமாதாரிகள் அரசாங்கத்துடன் 5 வருடத்திற்கான ஒப்பந்தம் ஒன்று செய்துள்ளதனால், வேலையற்றிருக்கும் டிப்ளோமாதாரிகள் வேறு தொழிலுக்கு செல்லமுடியாதுள்ளது என்றும், பலர் கூலி வேலைகளைத் தற்காலிகமாக செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
கல்வி அமைச்சின் அதிகாரிகள் இது தொடர்பாக இன்னமும் கவனம் செலுத்தவில்லை என்று குற்றம் சாட்டும் தேரர் நியமனத் திகதியைக் கூட இன்னமும் தெரிவிக்கவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.
5 வருடம் காத்திருந்தும் இன்னமும் தொழில் கிடைக்காதிருக்கும் டிப்ளோமாதாரிகள் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கத்து தான் நியமனம் பெற வேண்டி இருப்பின், அதற்கும் நாம் தயாரார் என்று தேரர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படாமையினால் பாடசாலைகளில் பல பிரச்சினைகள் உருவாகியுள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் செயலாளர் மகிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
கடந்த வருடமும் ஆர்ப்பாட்டம் செய்துதான் நியமனத்தை பெற்றுக் கொள்ள வேண்டியிருந்தது. இவ்வருடமும் ஆசிரிய மாணவர்களின் நலனுக்காக இடையீடு செய்ய தேவைப்படின் அதற்கு நாம் தயங்கப் போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.