தேசிய கல்வியியல் கல்லூரி ஆசிரிய மாணவர்களில் 100 க்கும் அதிகமானோருக்கு தொற்று

தேசிய கல்வியியல் கல்லூரி ஆசிரிய மாணவர்களில் 100 க்கும் அதிகமானோருக்கு தொற்று

நில்வலா தேசிய கல்வியியல் கல்லூரியில் நடத்தப்பட்ட பி.சி.ஆர்.  மேலும் ஆன்டிஜென் சோதனையில் பரிசோதிக்கப்பட்ட அனைத்து ஆசிரிய மாணவர்களும் கோவிட் நோயால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

இதுவரை, 60க்கும் மேற்பட்ட மாணவர்கள் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்ட சுமார் 500 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள போதிலும் அவர்களில் யாரும் தனிமைப்படுத்தப்படவில்லை என்று அறியவருகிறது.

இந்நிலை காரணமாக, ஆசிரிய மாணவர்கள் பீதியில் உறைந்துள்ளதாக கல்வியியல் கல்லூரியின் உள்ளக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

அதே நேரம், மீரிகம ஹாபிடிகம கல்வியியல் கல்லூரியின் ஆசிரிய மாணவர்கள் 50 க்கும் அதிகமானோர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

அவர்களை தமது வீடுகளுக்குச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

ஹாபிடிகம ஆசிரிய மாணவர்களுக்கு வீடுகளுக்குச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதைப் போன்று தமக்கும் வீடுகளுக்குச் செல்ல அனுமதி வழங்குமாறு நில்வலா தேசிய கல்வியியல் கல்லூரி மாணவர்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர். 

SHARE the Knowledge

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!