தேசிய கல்வியியல் கல்லூரிகள் நாளை ஆரம்பம்

 

தேசிய கல்வியியல் கல்லூரிகள் நாளை ஆரம்பம்

தேசிய கல்வியியல் கல்லூரிகள் நாளை 15 ஆம் திகதி ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 15 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு 18 ஆம் திகதி கல்வி நடவடிக்கைககள் ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. 

எனினும் மாணவர்கள் தமது கற்றலை ஆரம்பிப்பதில் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கொரோனா இடைத்தங்கல் முகாமாக அனைத்து தேசிய கல்வியியல் கல்லூரிகளும் சுகாதார அமைச்சின் வழிகாட்டலின் கீழ் பயன்படுத்தப்பட்டன. 

திடீரென அறிவிக்கப்பட்ட விடுமுறை காரணமாக மாணவர்கள் தமது உடைமைகள், உடைகள், புத்தகங்கள் தனிப்பட்ட பாவனைப் பொருட்கள் என அனைத்தையுமு் வைத்துவிட்டு வீடுகளுக்கு சென்றனர். 

தற்போது அனைத்து விடுதிகளும் மீளவும் கல்லூரி நிர்வாகத்திடம் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் மாணவர்களின் அனைத்து ஆடைகளும், புத்தகங்களும், தனிப்பட்ட பயன்படுத்தல் சாதனங்களும் சேசதப்படுத்தப்பட்டுள்ளன. அல்லது அவற்றில் எதனையும் பயன்படுத்த முடியாத அளவிற்கு அவை சேதமாக்கப்படட்டுள்ளன. 

எனவே, புதிதாக கல்லூரி கற்றல் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு ஏற்பாடுகள் நடைபெற்ற போதிலும் தமது உடமைகளை மீண்டும் கொள்வனவு செய்ய வேண்டி ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்து கல்வி அமைச்சர் மற்றும் உரிய தரப்பினருக்கும் மாணவர்கள் கடிதம் அனுப்பி உள்ளனர்.

இது தொடர்பாக உரிய தரப்பினர் கவனம் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ள மக்கள் விடுதலை முன்னணியின் சுனில் ஹதுந்ஹெட்டி, எந்த ஆடையை எனும் உடுத்திக் கொண்டு வாருங்கள் என்ற அறிவித்தலோடு மாணவர்களை அழைத்து மாத்தறையில் நிகழ்வொன்றை ஏற்பாடு செய்திருந்தார். 

இரண்டாம் வருட மாணவர்கள் தமது கற்றல் நடவடிக்கைகளை ஆரம்பித்து குறிப்பிட்ட மூன்று மாத காலத்திற்கு தொடர உள்ளனர். இவர்கள் உயிர் குமிழி அடிப்படை தங்க வைக்க திட்டமிடப்பட்டாலும் விரிவுரையாளர்கள் வெளியிலிருந்தே வருகை தரவுள்ளதால், இந்த உயிர் குமிழி முறை சாத்தியமில்லை என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

எனினும் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் நாளை ஆரம்பிக்கப்படும் கல்லூரிகளின் கற்றல் நடவடிக்கைகள் எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 

SHARE the Knowledge

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!