தேசிய கல்வி நிறுவகத்தின் ஆசிரியர் கல்வித் துறை பாடநெறிகளுக்கு விரிவுரையாளர்களாகத் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.
நியமனங்களை வழங்கும் வைபவம் எதிர்வரும் 17 மற்றும் 18 ஆம் திகதிகளில் தேசிய கல்வி நிறுவத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய கல்வி நிறுவகத்தின் பாடநெறிகளில் விரிவுரையாளராகக் கடமையாற்றுவதற்கு கோரப்பட்டிருந்த விண்ணப்பங்களின் அடிப்படையில் இடம்பெற்ற நேர்முகத் தேர்வில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு இந்நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.
நியமனம் பெறுபவர்கள் தேசிய கல்வி நிறுவகத்தின் பாடநெறிகளில் பிராந்திய நிலயங்களில் விரிவுரையாளராகக் கடமையாற்ற அழைக்கப்படுவர்.
இந்நியமனங்கள் எதிர்வரும் 1.5.2019 முதல் செல்லுபடியாகும் அதே வேளை நியமனத்திற்கு தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு அழைப்புக்கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
தமிழ் மொழி மூலமான விரிவுரையாளர்களுக்கான நியமனக் கடிதங்கள் எதிர்வரும் 17 ஆம் திகதி 10 மணிக்கு நடைபெறவுள்ளதாக தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்கள்.