நவம்பர் 1 ஆம் திகதியின் பின்னர், டியுசன் வகுப்புக்களை ஆரம்பிக்க உள்ளதாக அகில இலங்கை தொழில்ரீதியான விரிவுரையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
டியுசன் வகுப்புக்களை ஆரம்பிப்பதற்கான சுகாதார வழிகாட்டல்கள் விரைவில் கிடைக்கும் என்று தான் நம்பவதாக சங்கத்தின் தலைவர் அமித் புஸல்ல தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைெற்ற ஊடகவியலாளர் சந்திப்பல் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தார்.
ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற கொவிட்19 தடுப்பு செயலணியின் கூட்டத்தில் 100 மாணவர்களுக்குட்பட்டு டியுசன் வகுப்புக்களை ஆரம்பிப்பது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. அதற்கான சுகாதார வழிகாட்டல்களை விரைவில் தயாரிக்க கலந்துரையாடப்பட்டது.
நவம்பர் 1 இன் பின்னர், 100 மாணவர்களை விட குறைவான டியுசன் வகுப்புக்களை ஆரம்பிக்க எதிர்பார்க்கிறோம். என்றார்