பட்டதாரிகள் அனைவருக்கும் ஆசிரியர் சேவைக்கு விண்ணப்ப சந்தர்ப்பம் வழங்குங்கள் – ஜோஸப் ஸ்டாலின்
மத்திய மற்றும் மாகாண அரச பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கு அனைத்து பட்டதாரிகளுக்கும் சந்தர்ப்பம் வழங்க வேண்டும் என்று இலங்கை ஆசிரியர் சங்கம் கல்வி அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
தற்போது கோரப்பட்டுள்ள விண்ணப்ப நிபந்தனையின் படி, 2018,2019 மற்றும் 2020 வருடங்களில் நியமனம் பெற்ற குறிப்பிட்ட வயதுக்குட்பட்டவர்களுக்கு விண்ணப்பிக்க முடியும். எனினும், தற்போது பாடசாலைகளில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியனம் பெற்று ஆசிரியர்களாக குறிப்பிட்ட காலம் கடமையாற்றிக் கொண்டிருக்கும் பட்டதாரிகளில் பலருக்கு இந்த வாய்ப்பு கிடைக்காது போகும். அவர்கள் பலர் ஆசிரியர் சேவையில் இணைய கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
இந்த நியனமங்கள் அனைத்தும் ஆசிரயிர் சேவைப் பிரமாணக் குறிப்பிற்கு அமையவும் அனைத்து தரப்பினருக்கும் விண்ணப்பிக்க சந்தர்ப்பம் வழங்கும் வகையிலும் அனைய வேண்டும் என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோஸப் ஸ்டாின் தெரிவித்துள்ளார்.
பிரச்சினைக்கு முகங்கொடுத்துக் கொண்டிருக்கும் அனைவருக்கும் தீர்வாக, சேவைப் பிரமாணக் குறிப்பிற்கு அமைய ஒரேதடவையில் நியனம் வழங்குவதற்கான முறை ஒன்றை நடைமுறைப்படுத்துமாறு அவர் வேண்டுகோளை முன்வைத்துள்ளார்.
இல்லையேல் தொடர்புடைய பாதிக்கப்பட்ட தரப்பினருடன் இணைந்து ஏனைய நடவடிக்கைகளில் இறங்க நேரிடும் என்றும் அவர் எச்சிரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.