பயிலுனர் பட்டதாரிகள் 53ஆயிரம் பேருக்கும் மூன்று மாதங்களில் நிரந்தர நியமனம் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
அரச சேவைக்கு இணைத்துக்கொள்ளப்பட்டிருக்கும் பயிலுனர் பட்டதாரிகளில் 18ஆயிரம் பேர் அரச பாடசாலைகளுக்கு இணைக்கப்பட்டிருக்கின்றனர். இவர்கள் ஆசிரியர் சேவைக்கு விருப்பம் தெரிவிப்பவர்களல்ல. ஆனால் ஆசிரியர் சேவைக்கு விருப்பமானவர்கள் வேறு அரச சேவைகளுக்கும் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.
அத்துடன் அரச சேவைக்கு இணைத்துக்கொள்ளப்பட்டிருக்கும் 53ஆயிரம் பயிலுனர் பட்டதாரிகளுக்கும் 03மாதங்களில் நிரந்தர நியமனம் வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்திருக்கின்றது. அதுதொடர்பில் அமைச்சரவை உபகுழு அமைக்கப்பட்டு கலந்துரையாடப்படுகிறது. பயிலுனர் பட்டதாரிகளில் ஆசிரியர் சேவைக்கு விருப்பம் உள்ளவர்களை ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்வது தொடர்பில் கலந்துரையாடி வருகின்றோம்.
அந்த தீர்மானம் கிடைத்த பின்னர் அவர்களை ஆசிரியர் சேவைக்கு இணைத்துக்கொள்ள முடியும் என்றார்.
பாராளுமன்றில் எழுப்பப்பட்ட வாய்மொழி மூல வினாவிற்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.