பாடசாலைகளில் தரவு அதிகாரிகளை நியமனம் செய்ய நடவடிக்கை
பாடசாலை மட்டத்தில் நிகழ்நிலை தகவல் முறைமையை இற்றைப்படுத்தல் மற்றும் ஒழுங்குமுறையாகப் பராமரித்தல், நிகழ்நிலை பாடசாலை புள்ளிவிபர செயன்முறையை ஒழுங்குபடுத்தப்பட்ட வகைகயில் முன்னெடுத்தல் ஆகிய நோக்கங்களின் அடிப்படையில் பாடசாலை மட்டத்தில் தரவு அதிகாரியை நியமிப்பதற்கான தேவை எழுந்துள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
மாகாணக் கல்விப் பணிப்பாளர்களுக்கு அவர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில், இச்செயன்முறைக்காக தற்போது பாடசாலையில் கடமையாற்றும் கல்வி சார் அல்லது கல்விசாரா ஊழியர்களில் ஒருவரை நியமிக்குமாறு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
இந்த தரவு அதிகாரியிடம் காணப்படவேண்டிய தகமை மற்றும் அவருடைய கடமைக்கூறுகள் மற்றும் பயிற்சிகள்
தொடர்பான தெளிவுபடுத்தல்களை கல்விப் பணிப்பாளர் (தகவல் முறைமை விருத்தி மற்றும் தரவு முகாமைத்துவம்) ஊடாக விரையில் அறிவிக்கப்படும் என்றும் கல்வி அமமச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.