பாடசாலையை மூடுவதற்கு பரிந்துரைக்காமைக்காக பணி நீக்கம் செய்யப்பட்ட அதிபருக்கு 10 வருடங்களுக்குப் பின்னர் நீதி

 பாடசாலை ஒன்றை மூடுவதற்கு பரிந்துரைக்காமைக்காக பணி நீக்கம் செய்யப்பட்ட அதிபருக்கு 10 வருடங்களின் பின்னர், வேலை நீக்கம் செய்யப்பட்ட காலம் முதல் தற்போது வரையான சம்பளத்துடன் மீண்டும் பணிக்கு அமர்த்தப்பட வேண்டும் என்று மேன்முறையீட்டு நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 

இந்தத் தீர்ப்பு கடந்த 20 ஆம் திகதியன்று வழங்கப்பட்டிருந்தது. 

2011.11.11 ஆம் திகதி திடீரென இந்த பாடசாலை முடப்படுகிறது. இது 2007 ஆம் ஆண்டு பாடசாலையில் கட்டப்பட்ட கட்டடமொன்றை அம்பலங்கொட பிரதேச சபைத் தலைவர் உட்பட சிலர் அகற்றியமை தொடர்பாக தொடரப்பட்ட வழக்கொன்றின் அடிப்படையில் இடம்பெற்றது. 

எனினும் 2012 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில் இப்பாடசாலை மீளவும் ஆரம்பிக்கப்பட்டிருக்க வேண்டும். எனினும் தென்மாகாண கல்வி அதிகாரிகள் இந்தக் கட்டளையை நடைமுறைப்படுத்தவில்லை. 

பாடசாலை மூடப்பட்டதோடு, அதன் ஆவணங்கள் அம்பலங்கொட வலயக் கல்வி அலுவலகம் பெறுப்பேற்றது. எனினும் அந்த ஆவணங்கள் காணமலாக்கப்பட்டுள்ளன. 

2012 மார்ச் 6 ஆம் திகதி இந்த பணி நீக்கம் இடம்பெற்றுள்ளது. அம்பலாங்கொட தம்மகுசல வித்தியாலயத்தை மூடுவதற்கு பரிந்துரைக்காமையினால் இந்த அதிபர் பதவி பறிக்கப்பட்டு்ளளார். 

இதுபற்றி ஆராயப்பட்டு, 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம், குறிப்பிட்ட கட்டடத்தை உடைத்து அகற்றிமை தொடர்பாக பொலிஸ் விசாரணை முன்னெடுக்கப்பட்டது. இதன் போது அம்பலாங்கொட உப தவிசாளர், கட்டடத்தை உடைப்பதற்கு தென்மாகாண பொறியியல் சேவைத் திணைக்களம் தமக்கு அனுமதி வழங்கியதாககத் தெரிவித்திருந்தார். எனினும் அவ்வாறான அனுமதியை தாம் வழங்க வில்லை என தென்மாகாண பொறியியல் சேவைத் திணைக்களம் நீதி மன்றிற்கு அறிவித்து நிறுவியது. எனினும் பொலிஸ் விசாரணை அதனைத் தாண்டிச் செல்லவில்லை. 

நியுஸ் பெஸ்ட் செய்தி

SHARE the Knowledge

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!