பாடசாலை சீருடைக்குத் தேவையான 68 சதவீத துணிகள் வலயக் கல்வி அலுவலகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
கல்விச் சேவைகள் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த, அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.
கடந்த இரண்டு வருடங்களாக பாடசாலைகள் நடைபெறாத போதிலும், 4.5 மில்லியன் பாடசாலை மாணவர்களுக்கு சீருடை, பாடசாலை பாடப் புத்தகங்கள் மற்றும் காலணி வவுச்சர்கள் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இந்த ஆண்டுக்கு தேவையான 12,694,000 மீட்டர் துணிகளில் 68 சதவீதம் ஏற்கனவே வழங்கப்பட்டுவிட்டதாகவும், மீதமுள்ளவை ஜனவரி 31ம் தேதிக்குள் வலயக் கல்வி அலுவலகங்களுக்கு வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்