புலமைப் பரிசில் பரீட்சையில் தமது பிள்ளைகளுக்கு அநீதி
புலமைப் பரிசில் பரீட்சையில் தமது பிள்ளைகளுக்கு அநீதி இழைக்கப்பட்டதாக திஸ்ஸமஹாராமவில் பெற்றோர் ஆர்ப்பாட்டம்
திஸ்ஸமஹாராம ஜனாதிபதி கல்லூரி மாணவர்களின் பெற்றோர்கள் இன்று (28) திஸ்ஸமஹாராம தெபரவெவ வீதியில் புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள்கள் தாமதமாக வழங்கப்பட்டதற்கும் கடினமான கேள்விகளை தமது பிள்ளைகளுக்கு வழங்கியதற்கும் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காலை 9.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை நடைபெற்ற போராட்டத்தில் சுமார் 150 பெற்றோர் கலந்து கொண்டனர்.