புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறு இன்று மாலை

2021 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளை இன்று (12) இரவு வெளியிடுவதற்கு தயாராகுமாறு கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தனது அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

அதன்படி இன்று இரவு முடிவுகள் வெளியாகும்.

2021ஆம் ஆண்டு 5ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை ஜனவரி 22ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை கடந்த வருடங்களில் ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்தப்பட்டு, அதனை மாற்றி இம்முறை சனிக்கிழமை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன தெரிவித்தார்.

புலமைப்பரிசில் பரீட்சையில் சிங்கள மொழிமூலத்தில் 255,062 மாணவர்களும், தமிழ் மொழிமூலத்தில் 85,446 மாணவர்களும், மொத்த எண்ணிக்கை 340,508 மாணவர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

SHARE the Knowledge

5 thoughts on “புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறு இன்று மாலை

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!