தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை வினாத்தாள்களின் கலா அளவை 15 நிமிடங்களால் நீடிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது,
அதன்படி, இது வரை வழங்கப்பட் 45 நிமிட காலம் ஒரு மணி நேரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சில் இன்று (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கல்வி அமைச்சர் டல்லாஸ் அலகாபெரும இதனைத் தெரிவித்தார்.
இந்த ஆண்டுதரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை அக்டோபர் 11 ஆம் தேதி நடைபெற உள்ளது. தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு 4 மாதங்களுக்கும் மேலாக பாடசாலைகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டமையைக் கருத்திற்கொண்டு நிவாரணம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இரண்டாவது வினாத்தாளில் உள்ள 4 தெரிவுகளை இந்த முறை 3 தெரிவுளாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் கல்வி அமைச்சர் தெரிவித்தார்.