புலமைப் பரிசில் பரீட்சை- கண்ணீருடன் வெளியாகிய மாணவர்கள்

 

இன்று நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சை முடிவடைந்த போது  சில பிரதேசங்களில் பரீட்சை மண்டபத்திலிருந்து சிறுவர்கள் அழுதுகொண்டே வெளியே வந்திருந்தமை பதிவாகியுள்ளது.

 வெலிமடை கல்வி வலயத்திற்குட்பட்ட விஜயா கல்லூரியில் நடைபெற்ற பரீட்சை நிலையத்தின் முதல் வினாத்தாள் உரிய நேரத்தில் மாணவர்களுக்கு வழங்கப்படத போதிலும் உரிய நேரத்தில் அவை ஒன்று திரட்டப்பட்டதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

 இதனால், பரீட்சைக்கு விடையளிக்க போதிய அவகாசம் இல்லாததால், மாணவர்கள் பரீட்சை மண்டபத்தை விட்டு வெளியே வந்து அழுதுள்ளனர்.

 சில மாணவர்கள் விடை எழுதிக் கொண்டிருக்கும் போது வினாத்தாளை அதிகாரிகள் பறித்து சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

 இதன் காரணமாக இதற்காக நீதி கோரி பெற்றார் வெலிமடை – பதுளை பிரதான வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 சுமார் 150 மாணவர்களுக்கு இந்த அநீதி நடந்துள்ளதாக பெற்றோர் குற்றம் சாட்டுகின்றனர்.

 சம்பவம் தொடர்பில் பெற்றோர்கள் வெலிமடை வலயப் பணிப்பாளர் ரோஹித அமரதாசவைச் சந்திக்க முயற்சித்த போதும், அது சாத்தியமாகவில்லை.

 பின்னர், சம்பவம் தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதாக வலயக் கல்வி அலுவலகத்திற்குச் சென்ற பெற்றோரிடம் ரோஹித அமரதாச தெரிவித்துள்ளார்.

 இதேவேளை, நாகொட ஆரம்ப பாடசாலையிலும் இவ்வாறான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

 இந்த ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கு 255,062 சிங்கள மொழி பரீட்சார்த்திகள் மற்றும் 85,446 தமிழ் மொழி மூல பரீட்சார்த்திகள் உட்பட மொத்தம் 340,508 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

SHARE the Knowledge

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!