போராட்டத்துக்கு நீதி கிடைத்தது

 

Teachmore


ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பள முரண்பாடுகள் தொடர்பான சுற்றறிக்கை வெளியிடப்பட்டமை முழு கல்வித் துறைக்கும் கிடைத்த பாரிய வெற்றி என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. 

ஜனவரி 20 இல் அதிபர், ஆசிரியர்களுக்கு உரிய சம்பளம் வழங்கப்படும் என சங்கத்தின் பொது செயலாளரான ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் ஆசிரியர் உதவியாளர்கள் தங்களது நியாயமான கோரிக்கைகளை வென்றெடுக்க 120 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.

சம்பள முரண்பாடுகளை தீர்ப்பதற்கான ஒதுக்கீடு வரவு -செலவுத் திட்டம் மூலம் பாராளுமன்றத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், சுற்றறிக்கை வெளியிடப்பட்டதால், அதிகாரிகள் தனிநபர்களின் புதிய சம்பளத்தை கணக்கிட்டு இந்த மாதத்திலிருந்து சம்பள உயர்வுகளை வழங்க வேண்டும். 

சுபோதினி குழு அறிக்கையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு அவர்கள் கோரிய போதிலும், 2018 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட குழு அறிக்கையின் ஊடாக ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பள முரண்பாடுகளை தீர்க்க அரசாங்கம் முன்மொழிந்ததாகவும் தெரிவித்த அவர் அரசாங்கத்தின் முன்மொழிவுக்கு தொழிற்சங்கம் சம்மதித்துள்ளதாகவும், இப்போது தங்கள் கடமைகளை தொடருவோம் எனவும் மேலும் தெரிவித்துள்ளார்.

SHARE the Knowledge

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!