மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலாவது சிங்கள பாடசாலை: 25 மாணவர்களுடன் இன்று ஆரம்பம்
யுத்தம் நிறைவடைந்து பதின்மூன்று வருடங்களின் பின்னர் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா பிரதேசத்தில் முதலாவது சிங்கள பாடசாலை திறப்பு விழா இன்று (24) கல்குடா பிரதேசத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் திருமதி அனுராதா யஹம்பத் தலைமையில் இடம்பெற்றது.
சிறி சீலாலங்கார சிங்கள வித்தியாலயம் எனப் பெயரிடப்பட்டுள்ள இப்பாடசாலையானது பல கிராமங்களைச் சேர்ந்த 25 மாணவர்களை சேர்த்துக் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத், மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சிங்கள சமூகம் சம உரிமையும் கல்வி உரிமையும் பெற்றுக்கொள்ளப்பட வேண்டுமென தெரிவித்தார்.
இந்நிகழ்வில் ஒரு தமிழ் சிறுவன் உட்பட ஐவர் பெளத்த துறவிகளாகினர்.

