மஹாபொல நிதி திருத்தச் சட்டம் நடைமுறைக்கு

 மஹாபொல உயர்கல்வி புலமைப்பரிசில் நம்பிக்கை நிதியம் (திருத்தம்) சட்டமூலம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவினால் நேற்று (14) ஒப்பமிடப்பட்டது.

 இதன்படி, 2022 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க மகாபொல உயர்கல்வி புலமைப்பரிசில் நம்பிக்கை நிதியம் (திருத்தம்) சட்டம் நேற்று முதல் அமுலுக்கு வரவுள்ளது.

 இது கடந்த 8ஆம் தேதி நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.

 இதன்படி, 1981 ஆம் ஆண்டின் 66 ஆம் இலக்க மஹாபொல உயர்கல்வி புலமைப்பரிசில் அறக்கட்டளை நிதியச் சட்டத்தை “லலித் அத்துலத்முதலி மஹாபொல உயர்கல்வி புலமைப்பரிசில் அறக்கட்டளை நிதிச் சட்டம்” என மாற்றியமைக்கிறது.

SHARE the Knowledge

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!